வேகமாக பரவும் “நிபா வைரஸ்”… தமிழக – கேரள எல்லை பகுதிகளில் தீவிர சோதனை!!
கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொடர்ந்து பல உயிர்களை காவுவாங்கி கொண்டிருக்கிறது. மேலும், இந்த வைரஸ் கொரோனாவை காட்டிலும் அதி வேகமாக பரவி வருகிறது. மூச்சுக்காற்று மற்றும் வியர்வையால் கூட இந்த தொற்று பரவுவதால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. நிபா வைரஸ் தொற்று பரவிய 24 முதல் 48 மணி நேரத்திலேயே நோயாளி கோமா நிலைமைக்கு தள்ளப்படலாம்.
பெண்களின் மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை..!! அரசு அதிரடி அறிவிப்பு..!!
இதனையடுத்து நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் ‘நிபா’ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் அம்மாநில சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
























