சிகாகோ சென்றடைந்தார் தமிழக முதல்வர்..!! அப்போ, மீண்டும் ஒப்பந்தங்கள் தான்”..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை முடித்து, தற்போது சிகாகோ நகருக்கு புறப்பட்டுள்ளார்.
அமெரிக்கா இலினொய் மாநிலத்தில் உள்ள சிகாகோ மாநகரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று புறப்பட்டார். மேலும், விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள் சிறந்த முறையில் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து, முதலீடு வாய்ப்பு குறித்து, அங்கு அமைந்திருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


























