மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பாடம் கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் பாடத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் கட்டாயம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தாய்மொழி தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என புகார் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம் கடந்த 2015-16 ஆம் ஆண்டு முழுமையாக அமலுக்கு வந்தது. ஆனால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்படும் எனவும் 2023-24 ஆம் கல்வியாண்டில் 9 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CONCOR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.2,60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் ராணுவ துறையின் சைனிக் பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்குவது என்பது அந்த பாடத்திற்கான ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ் பாட வேளைகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்க கூடாது எனவும் இதற்கான பாடத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்பட்டு அரசு தேர்வு துறையால் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Join Our WhatsApp
Group” for Latest Updates