நீதிபதிகளின் அனைத்து விவரங்களும் இணையத்தில் வெளியீடு.. உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, “உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் முறை, அவர்களின் உறவினர்கள் யாராவது நீதிபதிகளாக இருந்துள்ளார்களா..? மற்றும் தற்போது பணியில் உள்ள மற்றும் முன்னாள் நீதிபதிகள் தொடர்பான அனைத்து விவரங்களும் உச்சநீதிமன்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது”. மேலும், பொதுமக்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில், இந்த பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. இந்திய வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
மேலும் “கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025, மே 5 ஆம் தேதி வரை, உச்சநீதிமன்றதால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதிபதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்ட தேதி, நியமிக்கப்பட்ட தேதி, சமூக வகுப்பு போன்ற அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன என்றும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது”.


























