முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை.. இந்திய வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கும் முன்பே பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கத்திரி வெயில் காலமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (04-05-2025) தொடங்கியது. இதன் தாக்கம் வரும் மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் கடும் வெயிலால் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மக்கள் பலர் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மழையின் மூலம் நாட்டின் பெரும்பாலான தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் அதிகம் தான். இந்நிலையில் “வழக்கமாக மே இறுதியில் தொடங்கும் இந்த பருவமழை நடப்பாண்டில் 2 வாரம் முன்னதாக, அதாவது மே 13 ஆம் தேதியே தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது”.
Join the ExamsDaily Whatsapp Group


























