ப்ரியங்காவிற்கு பதில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி – குவியும் வாழ்த்துக்கள்!

0
ப்ரியங்காவிற்கு பதில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி - குவியும் வாழ்த்துக்கள்!
ப்ரியங்காவிற்கு பதில் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி - குவியும் வாழ்த்துக்கள்!
ப்ரியங்காவிற்கு பதில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஷிவாங்கி – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் வழக்கமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சியை குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர்:

விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அனைத்து நிகழ்ச்சிகளும் மாறுபட்ட கான்செப்ட்டில் இருந்தாலும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களை வைத்தே சீரியல் வெற்றி இருக்கிறது. மாகாபா ஆனந்த், பிரியங்கா, மணிமேகலை, அர்ச்சனா, நிஷா என பல தொகுப்பாளர்கள் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி முதல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 தொடங்க இருக்கிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் – ரசிகர்கள் ஷாக்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை பொதுவாக பிரியங்கா தான் தொகுத்து வழங்குவார். ஆனால் அவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் ஏற்கனவே அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை கூட மாகாபா ஆனந்த தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல தற்போது தொடங்க உள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா அனந்த் தான் தொகுத்து வழங்குவது போல ப்ரோமோவில் காட்டப்பட்டது. அவருடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது திருமணத்தை பற்றி கூறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!

ஷிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமாக இருந்தாலும் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான் பாடகியாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். தற்போது பல ஹிட் பாடங்களை கொடுத்து பிசியாக இருக்கும் ஷிவாங்கி அறிமுகமான நிகழ்ச்சியிலேயே தொகுப்பாளராக மாறியது பலரது பாராட்டுகளை பெற்றது. மேலும் மாகாபா, ஷிவாங்கி சேர்ந்தால் நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!