தனது திருமணத்தை பற்றி கூறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!!
வெள்ளித்திரை நட்சத்திரங்கள் முதல் சின்னத்திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்து வரும் நிலையில், விஜே தீபிகா தனது திருமணத்தை பற்றி அளித்துள்ள பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ரசிகர்களின் கேள்விகள்:
நடிகர், நடிகைகளை ரசிகர்கள் அவர்களின் திறமை, குணம், நடிக்கும் திறன் இது போன்ற பல காரணங்களினால் பிடித்து போய் பின்தொடர்ந்து வருகிறார்கள். இதனால் அவர்களின் அன்றாட வாழ்வு முதல் எதிர்கால கனவு வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறர்கள். முந்தைய காலங்களில் இது போன்ற சந்தர்ப்பங்கள் ரசிகர்களுக்கு கிடைப்பது என்பது மிகவும் அரிதான விஷயமாகவே இருந்தது. ஆனால் தற்போது அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களின் கருத்துக்கள், புகைப்படங்கள் மற்றும் அவர்களின் திரைப்படம், சீரியல் ஆகியவற்றின் தகவல்களை சமூக வலைத்தளங்களின் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!
மேலும், ரசிகர்கள் தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கும் ஆர்வமாக பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது போட்டோஷூட், யூடூயூப் சேனல் என்று மிகவும் பிசியாக உள்ளவர். முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை பெற்றார். அதன் பிறகு, சில காரணங்களினால் தொடரில் இருந்து விலக்கப்பட்டார். ஆனாலும், தான் இப்படி தான் என்று தனது தன்னம்பிக்கையை விடாமல் தொடர்ந்து பல வேலைகளையும் செய்து வருகிறார். இவர் நேற்று தனது இன்ஸ்டா பக்கத்தில், ரசிகர்கள் தன்னிடம் கேள்விகளை கேட்கலாம் என்றும், தான் அதற்க்கு பாடல் மூலம் பதில் சொல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!
இதனால் விஜே தீபிகாவிடம் ரசிகர்கள் பல கேள்விகளையும் கேட்டிருந்தனர். அவற்றுக்கெல்லாம் தீபிகா பாடல் மூலம் மிகவும் சுவாரஸ்யமாக பதில் அளித்திருந்தார். அதில், ஒருவர், உங்க கல்யாணம் எப்போ என்று கேட்டிருந்தார். அதற்கு தீபிகா பெங்களூர் நாட்கள் படத்தில் வரும் மாங்கல்யம் பாடலில் வரும்,” தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே பறந்து கொண்டே தேன் குடிப்பேன் தேன் சிட்டு போலே” என்ற பாடல் வரிகளை பதிலாக அளித்திருந்தார். இவரது பதில்கள் அனைத்துமே ரசிக்கும் படியாக இருந்ததால், இந்த பதிவுகள் அனைத்தும் தற்போது வைரலாகி உள்ளது. இவரது முயற்சிகளுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்