
“விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர்”…!! நாசா வெளியிட்ட அதிரடி தகவல்…!!
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி விண்வெளிக்கு ஆய்வு செய்ய சென்றனர். மேலும், இவர்கள் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், தற்போது 8 மாதங்கள் கடந்தும் விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.
மேலும், ‘இதற்கு காரணம் அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததே காரணம்’ என்று நாசா விண்வெளி மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது நாசா இதுகுறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ”SpaceX’ நிறுவனத்தின் ‘Crew Dragon Capsule Racket’ மூலம் வருகின்ற மார்ச் மாதம் 12ஆம் தேதி விண்வெளி மையத்தில் இருந்து இருவரையும் பூமிக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளது.

























