
மாநிலங்களுக்கான வரி பகிர்ந்தளிப்பை குறைக்க திட்டம்…!! மத்திய அரசுக்கு ரூ. 35,000 கோடி கிடைக்கும் என தகவல்…!!
மத்திய அரசு வசூலிக்கும் வரிகளின் மொத்த வருவாயில் இருந்து தற்போது வரை, 41% நிதியானது மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வருவாயை 1% குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த வரி வருவாயை 41% லிருந்து 40% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இதற்காக மத்திய நிதி குழுவிடம் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Championship Trophy 2025: AUS vs AFG போட்டி இன்று நடைபெறுகிறது.. அரையிறுதிக்கு முன்னேற போவது யார் ?
இதனால், மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டில் ரூ. 35,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக நிதியை செலவிடுவதால், அதை ஈடுகட்ட இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான 16 வது நிதிக்குழு கூட்டத்தில் இந்த மாநிலங்களுக்கான வரி பகிர்ந்தளிப்பு குறைவு அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


























