
யுபிஐ வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…!! ஏப்ரல் 1 முதல் செயல்படாத ஐடிகள் முடக்கப்படும் என தகவல்…!!
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகளான பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றை பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, நீண்டகாலம் செயல்முறையில் இல்லாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ ஐடிகளை ரத்து செய்வதாக வெளியான செய்தியால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் (NPCI) தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களின் கவனத்திற்கு.. விரைவில் அமல்படுத்தப்படும் புதிய வங்கி விதிகள்.. எச்சரிக்கையா இருங்க
அதேபோல், செல்போன் எண்களை மாற்றி, அதனை வங்கிகளுக்கு தெரிவிக்காமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் யுபிஐ ஐடிகளும் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில்இணைக்கப்பட்டுள்ளது.
செல்போன் எண்கள் செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால், உடனடியாக புதிய செல்போன் எண் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மேலும், செயல்படாத எண்களில் உள்ள யுபிஐ ஐடிகளை ஆன்லைன் மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவே, இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

























