SSC CGL Tier-I தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
SSC CGL Tier-I தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC CGL Tier-I தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC CGL Tier-I தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

2023 ஆம் ஆண்டிற்கான பணியாளர் தேர்வு ஆணையத்தின் CGL விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC CGL Tier-I தேர்வு தேதி:

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு 2023 ஆணையத்தால் 14.07.2023 முதல் 27.07.2023 வரை நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்களின் பதிலளிப்புத் தாள்கள் மற்றும் தற்காலிக விடைத்தாள்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அதனை விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியான விடைக்குறிப்பில் ஏதேனும் பிழைகள் இருப்பின் 01.08.2023 முதல் 04.08.2023 (மாலை 5.00 மணி) வரை தெரிவிக்கலாம். ஒரு கேள்வி/பதில் சவாலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 04.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC CGL Tier 1 Answer Key 2023 Press Notice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!