
SSC CGL 20,000 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு, 2022க்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. தற்போது அதனை தொடர்ந்து, ஒரு முக்கிய அறிவிப்பை SSC தற்போது வெளியிட்டுள்ளது.
SSC தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு:
SSC Combined Graduate Level தேர்வு மூலம் உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் இப்பணிக்கு என 20,000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
பட்டப்படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு பட்டப்படிப்பில் உள்ளவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பத்தாரர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper), Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
மத்திய அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் அக்டோபர் 8 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது எனவும் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு கடைசி நேரத்தில் விண்ணப்பிக்காமல் தற்போதே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Super