பிரதமரின் அரசு பயணத்திற்கு முன் வந்த குட் நியூஸ்.. தமிழக மீனவர்கள் விடுதலை செய்த இலங்கை கடற்படை..!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து வருகின்றனர். மேலும், அவர்களின் படகுகள், மீன்கள், உபகரணங்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தமிழ்நாடு அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்தி வந்த நிலையில் கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மத்திய அரசு மீட்டெடுக்க தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, “பிரதமர் மோடி 3 நாள் அரசு பயணமாக இன்று (04-04-2025) இலங்கை செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மார்ச் 27ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மீனவர்கள் 13 பேரை இலங்கை அரசாங்கம் தற்போது விடுதலை செய்துள்ளது”.



























