வெயிட்டிங் டிக்கெட்டில் ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இதோ!
இந்தியாவில் பொது போக்குவரத்தில் சாதாரண மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது ரயில் போக்குவரத்து ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2.5 கோடிக்கும் அதிகமான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க விரும்புகிறார்கள். ஆனால் பல நேரங்களில் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் சென்றுவிடுகிறது.
ரூ.1000 சேமிக்க முடிந்தால் 3 மடங்கு லாபம் – செம்ம திட்டமா இருக்கே!
இந்திய ரயில்வே ரயில்களில் காத்திருப்பு டிக்கெட்டுகள் தொடர்பாக ஒரு விதியைக் கொண்டுள்ளது. நீங்கள் காத்திருப்புப் பட்டியலில் இருந்து ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்தால், அபராதம் செலுத்த வேண்டும். அபராதமாக ரூ.250 செலுத்த வேண்டும். அதனுடன், நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கிய இடத்திலிருந்து TTE-யால் பிடிபட்ட இடம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் மேலும் பயணிக்க விரும்பினால், நீங்கள் சென்றடைய விரும்பும் தூரம் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.


























