ரூ.1000 சேமிக்க முடிந்தால் 3 மடங்கு லாபம் – செம்ம திட்டமா இருக்கே!
தற்போதைய கால கட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் என பல்வேறு காரணத்திற்காக முதலீடு செய்து வருகின்றனர். இதில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான சந்தேக எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்பதே. மூத்த குடிமக்கள் முதல் இளைஞர்கள் வரை தபால் நிலையத்தில் முதலீடு செய்ய முடியும். ஐந்து அல்லது பத்து வருடங்களுக்கு பணம் வைக்க விரும்பினால், தபால் நிலையத்தில் ரெக்கரிங் கணக்கு திறக்கவும்.
Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த திட்டத்தின் மூலம் 100 ரூபாயில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.தபால் நிலையத்தில் குறுகிய காலத்திற்கு ரெக்கரிங் டெபாசிட் செய்ய விரும்பினால், குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு கணக்கு திறக்கலாம். ஐந்து, பத்து வருடங்களுக்கும் ரெக்கரிங் கணக்கு திறக்கலாம். இதில் வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கும்.தபால் நிலையத்தில் நீங்கள் ஐந்து வருடங்களுக்கு RD கணக்கு திறந்தால், 2 லட்சத்து 14 ஆயிரத்து 97 ரூபாய் கிடைக்கும். இதில் 34 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் மட்டுமே. தற்போது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கிற்கு 4% வட்டி விகிதம் கிடைக்கும்.


























