தமிழகத்தில் 4ம் தேதி தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் – இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

0
தமிழகத்தில் 4ம் தேதி தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் - இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
தமிழகத்தில் 4ம் தேதி தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் - இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
தமிழகத்தில் 4ம் தேதி தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் – இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது இம்மாத இறுதியுடன் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைகிறது. அதனால் இப்பணியை விரைவுப்படுத்தும் விதமாக வருகிற 4ம் தேதி மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

மெகா சிறப்பு முகாம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால் இதனை அனைவரும் செலுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பூஸ்டர் எனப்படும் கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு செலுத்தப்படுகிறது. இதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த தடுப்பூசியை 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி இம்மாத இறுதியுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைகிறது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தும் விதமாக வாரந்தோறும் தடுப்பூசி முகாம் அமைத்து இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

அந்த வகையில் வருகிற 4ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மையங்களில் முகாம் நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இம்மாதம் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பகுதியில் இருக்கும் முகாமில் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!