இனிமேல் அரசு ஊழியர்களுக்கு இவ்ளோ சலுகைகளா…?? தமிழக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்

0
இனிமேல் அரசு ஊழியர்களுக்கு இவ்ளோ சலுகைகளா...?? தமிழக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்
இனிமேல் அரசு ஊழியர்களுக்கு இவ்ளோ சலுகைகளா...?? தமிழக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்

இனிமேல் அரசு ஊழியர்களுக்கு இவ்ளோ சலுகைகளா…?? தமிழக பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்புகள்

2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று காலை தாக்கல் செய்தார். இதில், குறிப்பாக அரசு பணியாளர்களுக்கு என்றே அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, ஏற்கனவே அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, அதாவது அவர்கள் ஈட்டிய விடுப்புகளில், 15 நாட்கள் வரை சலுகைகள் அளித்து, ஒரு குறிப்பிட்ட தொகையானது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் வெளியாகும் புதிய 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள்.. பழைய நோட்டுகளை மாற்ற காரணம் என்ன..? RBI அறிவித்த திடீர் தகவல்..

மேலும், அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தாலோ, உடல் இயலாமை அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ. 1 கோடி வரையும், பணி காலத்தில் இயற்கை மரணமடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக ரூ. 10 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சைதாப்பேட்டையில் தாடண்டர் நகரில் அரசு பணியாளர்களுக்கு 190 ‘C’ வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விபத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வீட்டில் திருமண வயதை எட்டிய மகள்களின் திருமண செலவிற்கு தலா ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை நிதி உதவியும், அவர்கள் உயர்கல்வி பயின்றால் ரூ. 10 லட்சம் வரை நிதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!