
தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை…!!! ” மாணவர்களுக்கு சாதகமான பதிலை வழங்கிய தனியார் பள்ளி இயக்குநர்”..!!
தமிழகத்தில் 2024-25 ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற்றதை தொடர்ந்து, டிசம்பர் 24ம் தேதியில் இருந்து அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு, ஜனவரி 2ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது . மேலும், இவ்விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக எழுந்து வந்த புகாரை ஒட்டி தற்போது இது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையின் போது எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளி இயக்குநர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.


























