
மக்களே…Whatsapp-ல் வந்தாச்சு மீண்டும் ஒரு புதிய அப்டேட்…! ” சலுகைகளை அள்ளி கொடுக்கும் மெட்டா நிறுவனம்… அது என்னன்னு பாத்துட்டு போங்க”..!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் Whatsapp, Facebook, Instagram மற்றும் X போன்ற சமூக ஊடகங்களின் பங்கானது இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது. அதாவது, சாதாரண உரையாடல் தொடங்கி முக்கிய ஆவணங்களை பரிமாறுவது வரை அனைத்து விதமான செயல்களுக்கும் சமூக ஊடக சேவைகளை நாம் நாடுகிறோம். மேலும், கடந்த சில நாட்களாக Whatsapp-ல் புதிய புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வரும் மெட்டா நிறுவனம், தற்போது மீண்டும் அசத்தலான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, தற்போது நாம் பயன்படுத்தி வரும் Whatsapp-ல் சாட்டிங், காலிங், வீடியோ காலிங், பணபரிமாற்றம், ஆவணம் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன . மேலும், இதனை சிறப்பிக்கும் வகையில், தற்போது Whatsapp-ல் டாக்குமெண்ட்டை ஸ்கேன் செய்து அனுப்பும் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த சோதனை முதற்கட்டமாக IOS பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


























