ஐயப்பன் கோவிலுக்கு நவ.16 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பக்தர்கள் கவனத்திற்கு!!!
தமிழகத்தில் இருந்து நாளை மறுநாள் முதல் ஐயப்பன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக போக்குவரத்துகழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்து:
இன்னும் இரண்டு நாட்களில் கார்த்திகை மாதம் துவங்கவுள்ள நிலையில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி செல்ல காத்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நவ.16 ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரைக்கும் மதுரை, சென்னை மற்றும் திருச்சியில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயங்கவுள்ளதாக போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை தொடர்ந்து மீண்டும் அரசு விடுமுறை – மாணவர்கள் குஷி!!
எனவே, கார்த்திகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் 30 நாட்களுக்கு முன்பு இருந்தே முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் வெளியிடப்பட்டு சில மணி நேரத்திலேயே டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்யப்பட்டுவிடும் என்பதால் பயணிகள் விரைவில் www.tnstc.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக புக் செய்து கொள்ளவும்.