தெற்கு ரயில்வேயில் எக்கச்சக்க காலிப்பணியிடம் – ரூ.30,000 சம்பளம்! விண்ணப்பிக்க அக்.10 கடைசி நாள்!

0
தெற்கு ரயில்வேயில் எக்கச்சக்க காலிப்பணியிடம் - ரூ.30,000 சம்பளம்! விண்ணப்பிக்க அக்.10 கடைசி நாள்!
தெற்கு ரயில்வேயில் எக்கச்சக்க காலிப்பணியிடம் - ரூ.30,000 சம்பளம்! விண்ணப்பிக்க அக்.10 கடைசி நாள்!
தெற்கு ரயில்வேயில் எக்கச்சக்க காலிப்பணியிடம் – ரூ.30,000 சம்பளம்! விண்ணப்பிக்க அக்.10 கடைசி நாள்!

தெற்கு ரயில்வே துறையில் காலியாகவுள்ள பணியிடம், கல்வித்தகுதி, சம்பளம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடம்:

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் (JTA) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சிவில் என்ஜினீயர் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

மேலும், 18 வயது முதல் 32 வயது வரையிலான இளைஞர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதே போல, OBC பிரிவினருக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாகவே ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும், அக்டோபர் 10 தான் விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் உடனே விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LICன் சிறந்த சேமிப்பு திட்டம்.. தினமும் ரூ.134 மூலம் அதிக பலன் – முழு விவரம் இதோ!

இதோடு, ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். மேலும், நேர்முக தேர்வில் தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு சென்னையிலே பணியமர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!