பிப்.27 சிவகங்கையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்ரவரி 27) நடைபெறுகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்:
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்ரவரி 27) நடத்தப்படுகிறது. காலை 9 மணி அளவில் நடத்தப்படும் இந்த முகாமில் 50க்கு மேற்பட்ட முன்னணி தனியார்துறை ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
இந்த முகாமில் கலந்து கொள்ள கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, பிஇ, டிப்ளமோ படிப்புகள் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். நேரில் வரும்போது கல்விச்சான்றிதழ், ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
அண்ணா பல்கலையில் 4% மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் – ஆர்டிஐ தகவல்!!
வேலைவாய்ப்பு தொழில்நெறி மையத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக புதுப்பித்து வேலையில்லாமல் காத்திருப்போருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இந்த முகாம் மூலம் வேலை பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு குறித்து எந்த மாறுதலும் இருக்காது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்