ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!! பொருட்கள் வாங்குவதில் ஏமாற்றம்..முழு விவரம் உள்ளே..!!
நமது தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது புதிய ரேசன் அட்டை வாங்கியவர்களுக்கு ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டைக்கு மொத்தம் 2.80 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் 80 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்களுக்கும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்.. சுட்டெரிக்கும் வெப்பம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதாவது, புதிய ரேஷன் அட்டை வாங்கியவர்களின் பெயர் லிஸ்ட் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்றும், மேலும் அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை வாங்கியவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் ரேஷன் வட்டார மையம் தகவல் தெரிவித்துள்ளது.
























