முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது, ED தரப்பில் ஜாமினில் விடுவித்தால் ஆதாரங்களை செந்தில் பாலாஜி அழிக்க வல்லவர் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் அமலாக்கத் துறைக்கு எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பியது. அதற்கு சோதனையில் கைப்பற்றப்படாத சீகேட் ஹார்டு டிஸ்க் ஏற்கெனவே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வசம் இருந்தது என ED பதில் அளித்தது. அமலாக்கத்துறைக்கு பென் டிரைவில் என்ன கருத்துக்கள் இருக்கிறது என்பது பற்றி தெரியாத காரணத்தால் வழக்கு விசாரணை நாளைக்கு (ஜூலை 25) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



























