TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க ! இங்கே கிளிக் செய்யவும்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. போட்டி தேர்வுகள் மூலம் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் பொதுத்தமிழ், General Studies ஆகிய பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் பொதுத்தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது வெற்றி பெரும் வாய்ப்பை அதிகமாக்குகிறது. எனவே முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட சில கேள்விகள் கீழே தோத்து வழங்கப்பட்டுள்ளது.
1. நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
(A) வஞ்சிப்பா
(B) விருத்தப்பா
(C) வெண்பா
(D) கலிப்பா
விடை : (B)
2. முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
(A) சிந்துப்பா
(B) ஆசிரியப்பா
(C) வஞ்சிப்பா
(D) வெண்பா
விடை : (A)
3. தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
(A) 268
(B) 628
(C) 228
(D) 618
விடை : (A)
4. நாட்டுப்புறப்பாடலின் வகைகள்
(A) 7
(C) 6
(B) 5
(D) 8
விடை : (A)
5. உலகம்,உயிர்,கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காவியம் எது?
(A) பெரியபுராணம்
(B) கம்பராமாயணம்
(C) சிலப்பதிகாரம்
(D) மணிமேகலை
விடை : (A)
























