தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்த திட்டத்தால் போக்குவரத்து துறை நஷ்டம் அடைவதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக விரைவில் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்படுவதாக பரவும் தகவல், வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.



























