இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்யுங்கள்…அப்பறம் வேலைக்கே போகவே தேவையில்லை..!!
POST OFFICE ஆனது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், மூத்த குடிமக்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு நிலையான வருமானம் வேண்டும் என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், அவர்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்ட “மூத்த குடிமக்கள் சேமிப்பு” (SCSS) என்ற FD திட்டமானது 8.2% வட்டியை முதலீட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும், இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.1000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்பதால், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டு, உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
உதாரணமாக, இப்போது நீங்கள் ரூ. 30 லட்சம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால்,அதற்கு வட்டி வருமானம் மட்டுமே 5 ஆண்டுகளுக்கு ரூ.12,30,000 கிடைக்கும். மேலும், இதோடு முதிர்வு தொகையை சேர்த்து மொத்தமாக 5 ஆண்டுகள் கழித்து 42,30,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இந்த முதலீடு திட்டத்தை தொடர விரும்பினால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அதுமட்டுமின்றி, “மூத்த குடிமக்கள் திட்டம்” சட்டப்பிரிவு 80C-ன் கீழ் நீங்கள் வரி விலக்கும் கோரலாம்.
























