ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை பரவல் தற்பொழுது நாடு முழுவதும் குறைந்து வரும் சூழலில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவல் பாதிப்புகள் குறைந்து வந்ததையடுத்து கல்வி நிறுவனங்களை திறப்பதாக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 11 மற்றும் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூலை 26 ஆம் தேதி முதலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 5 முதல் மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கல்லூரிகளை பொருத்தளவு, செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 50% மாணவர்கள் திறனுடன் புதிய வகுப்புகள் மீண்டுமாக துவங்க உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – இயல்பு நிலைக்கு திரும்பியது இங்கிலாந்து!
இருப்பினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அவர்களின் பெற்றோரது ஒப்புதல் கட்டாயமானது என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பள்ளிகளையும் ஒரே நேரத்தில் திறக்கக்கூடாது என்றும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான வகுப்புகளை மீண்டும் துவங்குவது குறித்து இன்னும் 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அம்மாநிலத்தின் தனியார் பள்ளிகள் சங்கம், பள்ளிகள் திறப்பு என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில் அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 30,000 ஆசிரியர்களில் 25,000 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துள்ளதாகவும் ஜூலை 17 ஆம் தேதி அன்று அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் பள்ளி மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றி ஜூலை மாதத்தில் வாரம் இரண்டு நாட்களும், ஆகஸ்டில் நான்கு நாட்களும் பள்ளிகளை திறக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது. தவிர பள்ளிகளில் மாணவர்களின் நேரடி வகுப்புகளின் போது ஒரு இருக்கையில் ஒன்று அல்லது 2 மாணவர்களை மட்டும் உட்கார வைக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.