ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – இயல்பு நிலைக்கு திரும்பியது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் கொரோனாவால் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நேற்றுடன் அந்நாட்டு அரசு தளர்த்தி உள்ளது. இன்று மக்களுக்கு சுதந்திரமான நாள் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.
கட்டுப்பாடுகள் நீக்கம்:
கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 60 கோடி மக்கள் இறந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை பணிகளையும் துரிதப்படுத்தி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் இரண்டாம் கொரோனா அலை வேகமெடுத்து வருகிறது. இது உருமாறிய கொரோனா வைரஸ் என்பதால் முதல் அலையை விட அதிக வீரியத்துடன் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஓபிசி பிரிவினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கல் – புதிய ஆணை வெளியீடு!
இந்த நிலையில் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசிகள் உடலில் ஆன்டிபாடிகளை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இதனால் 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து இங்கிலாந்து கொரோனாவால் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நேற்றுடன் தளர்த்தியது. அங்கு வயதானவர்களின் 80% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதனை தொடர்ந்து ஜூலை 17ம் தேதி புதிய தொற்று பாதிப்பு 48,161 ஆக குறைந்தது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இனி பொதுமக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று மக்களுக்கு சுதந்திரமான நாள் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இனி பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்ற தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது”