தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முக்கிய அறிக்கை தாக்கல்!!

2
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முக்கிய அறிக்கை தாக்கல்!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முக்கிய அறிக்கை தாக்கல்!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? இன்று முக்கிய அறிக்கை தாக்கல்!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில் அது குறித்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. பின்னர் தொற்று குறைந்ததால் அடுத்தடுத்து தளர்வுகள் வழங்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசு, கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறந்து கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கியது. இதனால் ஜனவரி மாதத்தில் இருந்து அசாம், கர்நாடகா, புதுச்சேரி, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.

அஞ்சல்துறை அக்கவுண்டண்ட் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு – மத்திய அமைச்சருக்கு கடிதம்!!

சில மாநிலங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இருப்பினும் ஆன்லைன் கல்வி மட்டுமே தற்போது நடைமுறையில் இருப்பதால் மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வினை எதிர்கொள்வது கடினம். அதுமட்டுமின்றி அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

சென்னை அமேசான் வேலைவாய்ப்பு 2021 !

இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எனவே பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது உருமாறிய கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது.

போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – மாவட்ட வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு!!

அதனை பின்பற்றி ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எழுத்துப் பூர்வமாக பரிந்துரைகள் பெறப்பட்டது. அவை அனைத்தும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அவை பள்ளிக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி, இன்று சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் 80% பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!