ஜனவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது – நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!!

0
ஜனவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!!
ஜனவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது - நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!!
ஜனவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு கிடையாது – நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நகராட்சியில் செயல்படும் பள்ளிகள் ஜனவரி 15 வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, நகரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறக்க இன்னும் இறுதி தேதி முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகள் திறப்பு குறித்து தன்னிச்சையாக முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் அசாம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்கள் ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க ஆயத்தமாகி வருகிறது.

தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

இந்நிலையில் மும்பை நகராட்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 15 வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவும் உருமாறிய கொரோனா தொற்று அச்சம் காரணமாக மும்பையில் உள்ள பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடுவதற்கான தனது முடிவை விரிவுபடுத்தி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

டிசம்பர் 31 வரை நகரத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேதி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து, எந்த தகவலும் சுற்றறிக்கையில் இடம் பெறவில்லை.

இன்றும், நாளையும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – டெல்லி அரசு உத்தரவு!!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும். நகர எல்லைக்குள் தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் முமபை நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!