தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

1
தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இறுதியாண்டு மாணவர்கள் தவிர அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. பின்னர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

100% பணியாளர்களுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை – தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னையில் உள்ள ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இறுதியாண்டு மற்றும் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுகளும் நடத்தப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக பயின்று வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 – தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி பயிலும் மாணவர்களுக்கான 2020 ஆகஸ்ட்- செப்டம்பர் மாத செமஸ்டர் தேர்வு, 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு https://coe1.annauniv.edu என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கான கட்டண தொகையை ஆன்லைன் மூலமாக வருகிற ஜனவரி 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தேர்வுக்கான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்”, என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!