TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 – தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!

0
TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 - தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!
TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 - தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!
TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 – தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பாக துணை ஆட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கான குரூப் 1 தேர்வுகள் தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி 3ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வினாத்தாள்கள் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலம் வந்து சேர்ந்தது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுகள்:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. கொரோனா காரணமாக தேதிகள் ஒத்திவைக்கப்பட்ட பின் இறுதியாக ஜனவரி 3-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறைகள் பல தேர்வு ஆணையம் அமல்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானதாக ஜிபிஎஸ் லாக் முறை ஆகும். தேர்வு எழுதிய பின் விடைத்தாள் அடங்கிய பெட்டி ஜி.பி.எஸ் லாக் மூலம் லாக் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.

டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்- தமிழகத்திற்கு மத்திய அரசு விருது!!

இவ்வாறாக முறைகேடுகளை தடுக்க ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்தாலும் மறுபக்கம் தேர்வுக்கான வேலைகளில் தீவிரம் காட்டியுள்ளது. இவ்வாறாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 16 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே தேர்வுக்கான விடைத்தாள்கள் நேற்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. வினாத்தாள்கள் தனி அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!

அந்த அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைகளுக்கு பாதுகாப்பு போலீஸார் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரியும் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் அதிகம் நடக்கும் மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளதால் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!