ஜூன் 15 வரை பள்ளிகள் மூடல் – பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு!
மாநிலத்தில் நடைபெறும் தொடர் தாக்குதலின் காரணத்தினால் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரைக்கும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மூடல்:
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தெய் என்கிற சமூகத்தினர் தங்களையும் எஸ்டி என்கிற பிரிவில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கினால் தங்களின் உரிமைகள் ரத்து செய்யப்படலாம் என நாகா, குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கும் நடுவே கடுமையான தாக்குதல் நடைபெற்றது.
ஜூன் 1 (இன்று) முதல் மின் கட்டணம் திடீர் உயர்வு – பொதுமக்கள் கவனத்திற்கு!
மேலும், மணிப்பூரில் வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதலமைச்சர் முதலமைச்சர் பைரோன்சிங் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு சமூகத்தினரிடையே நடைபெற்று வரும் தாக்குதல் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி வரைக்கும் மணிப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என பள்ளிக்கல்வித்துறையில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.