ஜூன் 1 (இன்று) முதல் மின் கட்டணம் திடீர் உயர்வு – பொதுமக்கள் கவனத்திற்கு!
கேரளா மாநிலத்தில் இன்று (ஜூன் 1) முதல் மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 19 பைசா உயர்த்தப்பட இருப்பதாக எரிபொருள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது
மின் கட்டணம்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கோடை காலம் காரணமாக மக்கள் பலர் மின்சாதன பொருள்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் மின்சாரத் துறை மின் கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் கேரளாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 19 பைசா உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொது மக்கள் – போக்குவரத்து துறையின் அதிரடி ஏற்பாடுகள்!
மேலும் இந்த 19 பைசா உயர்வு என்பது 10 பைசா எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 9 பைசா ஆகியவை ஆகும். இந்த உயர்வால் மின்சார விலை ஒட்டுமொத்தமாக ரூ. 6.29 முதல் ரூ. 6.48 வரை அதிகரிக்கும். இந்த மின்கட்டண உயர்வு மாதத்திற்கு 40 யூனிட்டுகளுக்குக் குறைவான நுகர்வு கொண்ட உள்நாட்டு நுகர்வோருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.