ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் இவ்வளவு லாபமா? யூஸ் பண்ணிக்கோங்க மக்களே!
வங்கிகளில் பிக்சட் டெபாசிட் மூலம் அதிக லாபம் பெறும் ஒரு வாய்ப்பு உள்ளது. ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதமும் சற்று அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) அறிமுகப்படுத்திய கிரீன் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 3 முதிர்வு காலங்களில் முதலீடு செய்ய முடியும். அவை 1111 நாட்கள் கொண்ட FD, 1777 நாட்கள் கொண்ட FD, மற்றும் 2222 நாட்கள் ஆகும்.
டிஜிட்டல் மயமாகும் ரேஷன் கடை – இதெல்லாம் கூட பண்ண முடியுமா இனி!
இத்திட்டத்தில் 6.15%, 6.40%, 6.65% அளவிலான வட்டி வழங்கப்படுகிறது. 1777 நாட்கள் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.6,89,316.92 ஆக இருக்கும். 2222 நாட்கள் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு முதிர்வுத் தொகை ரூ.7,24,984.96 ஆக இருக்கும். இது போன்று ரூ.7.50 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்யும் போது அதற்கேற்ற முதிர்வுத் தொகை பெற முடியும்.

























