டிஜிட்டல் மயமாகும் ரேஷன் கடை – இதெல்லாம் கூட பண்ண முடியுமா இனி!

0

டிஜிட்டல் மயமாகும் ரேஷன் கடை – இதெல்லாம் கூட பண்ண முடியுமா இனி!

மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு.  எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள  மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 112 இடங்களில் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி.. வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளை சிறு ஏடிஎம் மையங்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு கூட்டுறவு துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி நம் வங்கி கணக்கில் உள்ள குறிப்பிட்ட அளவிலான தொகைகளை இனி ரேஷன் கடைகளிலேயே எடுத்து கொள்ள முடியும். பயோமெட்ரிக் அங்கீகாரம் கொண்ட ஒரு டிஜிட்டல் கருவியானது ரேஷன் கடைகளில் நிறுவப்பட இருக்கிறது. இந்த கருவியின் மூலம் அடிப்படையான வங்கி சேவைகளை மக்கள் ரேஷன் கடைகள் வாயிலாகவே எளிதாக பெற்றுக் கொள்ள முடியும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!