வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான புதிய வங்கி சேவை – SBI அறிமுகம்!
வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு துவங்கும்படியான புதிய சேவையை SBI அறிமுகம் செய்துள்ளது.
வங்கி சேவை:
SBI வங்கி வடிக்கையாளர்களின் தேவைகளுக்காக பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது எஸ்பிஐ வங்கி வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எந்தவித சிரமமும் இல்லாமல் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளை திறக்கும் படியான டிஜிட்டல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிஜிட்டல் வசதி புதிய வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் SBI வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இஞ்சி கிலோ ரூ. 280 ஆ…. அதிர்ச்சியில் மக்கள் – மற்ற காய்கறிகளின் விலை என்ன? விவரம் இதோ!
மேலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வங்கி தேவைகளுக்கு இந்த புதிய டிஜிட்டல் வங்கி சேவை திட்டம் நல்ல தீர்வாக அமையும் எனவும் SBI அறிவித்துள்ளது. அதே சமயம், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கின் நிலையை நிகழ் நேரத்திலேயே தொடர்ந்து கண்காணித்துக்கொள்ளலாம். அத்துடன் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு படிநிலைகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.