ரூ. 1 லட்சம் கோடி லாப இலக்கை நோக்கி SBI…!! ” வங்கி தலைவர் ஷெட்டி பேட்டி”..!!
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கி நிறுவனங்களுள் மிகப்பெரிய வங்கி நிறுவனமாக SBI செயல்பட்டு வருகிறது. மேலும், SBI வங்கியானது ஒரு புதிய இலக்கை அடைய உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, SBI 2023-24 நிதியாண்டுகளில் ரூ.61,077 நிகர லாபத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 3-5 ஆண்டுகளில் ரூ.1 கோடி நிகர லாபத்தை தாண்ட இலக்கு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து , SBI-ன் புதிய தலைவர் சி.எஸ். செட்டியிடம் பத்திரிக்கையாளர்கள் இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கையில், அவர் கூறியதாவது, ” திறன் எங்களிடம் உள்ளது, நிச்சயம் ரூ. 1 லட்சம் கோடி லாபத்தை அடைந்து இந்தியாவின் முதல் நிதியியல் நிறுவனமாக இந்த மைல்கல்லை அடைவோம்” என்று கூறினார்.
மேலும், அதனைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது, ” சந்தை மூலதனம், லாபம் போன்றவை எங்களுக்கு முக்கியமான கூறுகளாக இருந்தாலும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவைகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம், மேலும், இது எங்களின் செயல்பாடுகளின் அம்சங்கள் ” என்று தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், ரூ. 1 லட்சம் கோடி லாபத்தை அடைய வேண்டும் என்றால், தனியார் வங்கி கடன் முக்கிய பங்கு வகிப்பதால், ஏற்கனவே SBI ரூ. 4 லட்சம் கோடி வலுவான கடன் கோரிக்கைகளை இந்தியாவில் இருந்து பெற்றுள்ளது. இதனால், அடுத்த்ஸ் நிதியாண்டில் 2-வது பாதையில் தனியார் மூலதன செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


























