கிரெடிட் கார்டுதாரர்களின் கவனத்திற்கு…,புதிய விதிகளை அறிவித்த SBI வங்கி …!!
SBI அதன் கிரெடிட் கார்டு பயனாளர்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட ரிவார்ட் புள்ளிகளை (Reward Point) வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது SBI அதன் கிரெடிட் கார்டுதாரர்களுக்கான ரிவார்ட் புள்ளிகளை குறைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, “Simplyclick SBI கார்டு” மூலம் Swiggy யில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வழக்கமாக வழங்கப்பட்டு வந்த 10 மடங்கு ரிவார்ட் புள்ளிகள் இனிமேல் 5 மடங்காக குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், இது வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
UPI பயனாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்…இனி நீங்க பண்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஊக்கத்தொகை
இதையடுத்து, வருகின்ற மார்ச் 31 ஆம் தேதியில் இருந்து “ஏர் இந்தியா SBI பிளாட்டினம் கிரெடிட் கார்டு” மூலம் செய்யப்படும் விமான டிக்கெட் முன்பதிவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ. 100 க்கு 15 ரிவார்ட் புள்ளிகள் இனிமேல் 5 ஆக குறைக்கப்படும் என்றும், “ஏர் இந்தியா SBI Signature கிரெடிட் கார்டு” மூலம் செய்யப்படும் விமான டிக்கெட் முன்பதிவிற்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ. 100 க்கு 30 ரிவார்ட் புள்ளிகள் இனிமேல் 10 ஆக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், Apollo 24/7, BookMyShow, Cleartrip, Domino’s, IGP, NetMeds, Myntra மற்றும் Yatra ஆகியவற்றில் இதுவரை வழக்கத்தில் இருந்த 10 மடங்கு ரிவார்ட் புள்ளிகளே தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


























