UPI பயனாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்…இனி நீங்க பண்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஊக்கத்தொகை

0
UPI பயனாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்...இனி நீங்க பண்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஊக்கத்தொகை
UPI பயனாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்...இனி நீங்க பண்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஊக்கத்தொகை

UPI பயனாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்…இனி நீங்க பண்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஊக்கத்தொகை

 

இந்தியாவில் UPI பண பரிவர்த்தனைகள் மூலம் தற்போது புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். ஏனென்றால், பெரிய வணிக மையங்களான மால்கள் முதல் சிறு சிறு கடைகளில் கூட UPI -QR Code அட்டைகளை காண முடிகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் UPI பண பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது குறித்து  புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி தகவல்

அதாவது, “BHIM -UPI செயலி மூலம் சிறு வணிகர்கள் மேற்கொள்ளும் 2000 ரூபாய்க்கும் குறைவான பண பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1,500 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல்” அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையே நிதி சுமை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் 2025 -2026 ஆம் நிதியாண்டில் அதாவது வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இத்திட்டத்தில் மூலம் BHIM -UPI ல் ரூ. 2,000 வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு 0.15% ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும், எல்லா வகையான பண பரிவர்த்தனைகளையும் செலவின்றி மேற்கொள்ள, பூஜ்ஜிய மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் (MDR) அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!