மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு அகவிலைப்படியோடு 3% உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்து தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Airtel, VI & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் திட்டங்களில் Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சந்தா!

அந்த வகையில் தற்போது உத்திரப்பிரதேச மாநில அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 28 ம் தேதி அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன்படி இதுவரை மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% வழங்கப்பட்டு வருகிறது.

IPPB வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்!

அதனை தொடர்ந்து மீண்டும் உத்திரபிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் 28% லிருந்து 31% ஆக 3% உயர்த்தி வழங்க அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரம் என்றால் இந்த 31% அகவிலைப்படி உயர்த்தப்படுவதன் மூலம் ரூ.19,650 வரை ஊதியம் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here