Airtel, VI & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் திட்டங்களில் Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சந்தா!

0
Airtel, VI & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரீசார்ஜ் திட்டங்களில் Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சந்தா!
Airtel, VI & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ரீசார்ஜ் திட்டங்களில் Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சந்தா!
Airtel, VI & Jio வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் திட்டங்களில் Netflix, Prime Video, Disney+ Hotstar இலவச சந்தா!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவவை ப்ரீபெய்ட் , போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான சந்தாக்களை இலவசமாக வழங்குகிறது.

இலவச சந்தா

இப்போதெல்லாம் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கான ரீசார்ஜ் திட்டங்களுடன் சில சலுகைகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில் சாதாரண கேஷ் பேக் முதல் ஸ்ட்ரீமிங் சேவையின் இலவச சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் பார்ப்பதற்கு சிறந்த லாபமாக தெரிந்தாலும், இதற்கான ரீசார்ஜ் திட்டங்கள் சற்று தலை சுற்றத்தான் வைக்கின்றன. சமீபத்தில் முன்னணி OTT தலமான நெட்ஃபிக்ஸ் தனது ஸ்ட்ரீமிங் சேவையின் திட்டங்களுக்கான விலைகளை குறைத்தது.

அதே நேரத்தில் அமேசான் பிரைம் இப்போது சந்தா கட்டணத்தை அதிகரித்துள்ளது. பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளின் மாறி வரும் விலைகளுடன், பயனர்கள் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாறலாம். இதற்காக தான் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்தில் இவ்வகையான சலுகைகளை அளிக்கிறது. அந்த வகையில் இனி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து ஸ்ட்ரீமிங் சந்தாக்களையும் நீங்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதில் முதலாவதாக

ஏர்டெல்:

ஏர்டெல் தற்போது பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாக்களைத் தொகுக்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இதில் ரூ.108க்கான ஆட்-ஆன் திட்டம், 6 GB மொத்த டேட்டாவுடன், அப்போதைய திட்டத்தின் செல்லுபடி காலம் வரை வருகிறது. இந்த திட்டம் 30 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.

அடுத்ததாக ரூ.599 திட்டம், ஒரு நாளைக்கு 3 GB டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ரூ.838 திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை 56 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் வருடாந்திர ரூ.3,359 திட்டம் ஒரு நாளைக்கு 2 GB யுடன் 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது. இது Disney+Hotstarக்கான அடிப்படை சந்தா என்பது கவனிக்கத்தக்கது.

IPPB வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்!

ஏர்டெல், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புடன் சில ப்ரீபெய்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை வழங்கும் ரூ.359 திட்டமானது, 28 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தாவுடன் வருகிறது. அதுவே 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 GB டேட்டா வுடன் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மொபைல் சந்தாவை வழங்கும் ரூ.699 திட்டமும் உள்ளது இந்த அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தாவை மொபைல் சாதனத்தில் மட்டுமே அணுக முடியும்.

போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு வரும்போது, ஏர்டெல் ரூ.499 மாதாந்திரத் திட்டத்தை 75 GB டேட்டாவை ரோல் ஓவருடன் வழங்குகிறது. தொடர்ந்து ரூ.999 மாதாந்திரத் திட்டம் மற்றும் ரூ1,599 மாதாந்திரத் திட்டங்களிலும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினர் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் திட்ட உறுப்பினர் சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த மொபைல் திட்டம் ஆண்டுக்கு ரூ.499 செலவாகும். மற்றும் ஒரு சாதனத்தில் HD உள்ளடக்கத்திற்கான அணுகலை மட்டுமே வழங்குகிறது.

வோடபோன் ஐடியா:

வோடபோன் ஐடியா தொகுக்கப்பட்ட சந்தாக்களுடன் வரும் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இதில் தினமும் 3 GB டேட்டா வழங்கும் ரூ.501 திட்டம் 28 நாட்களுக்கும், ரூ.701 திட்டத்தில் 3 GB டேட்டாவை 56 நாட்களுக்கும், ரூ.901 திட்டத்தில் 3 GB டேட்டாவை 84 நாட்களுக்கும் வழங்குகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகின்றன.

வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு, ரூ.499 திட்டம் 75 GB டேட்டாவை வழங்குகிறது மற்றும் அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது. தவிர வரம்பற்ற டேட்டாவை வழங்கும் ரூ.699 திட்டத்திலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கொடுக்கப்படுகிறது. குறிப்பாக Netflix, Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar மொபைலின் வருடாந்திர தொகுக்கப்பட்ட சந்தாக்களுடன் வரம்பற்ற டேட்டாவை வழங்கும் ரூ.1099 மதிப்புள்ள VI RedX போஸ்ட்பெய்ட் திட்டமும் இதில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இவை ரூ.601, ரூ.799, ரூ.1,066 மற்றும் ரூ.3,119 திட்டங்கள் ஆகும். இவற்றில் ரூ.601 திட்டமானது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3 GB டேட்டாவையும், ரூ.799 திட்டமானது 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவையும், ரூ.1,066 திட்டமானது 84 நாட்களுக்கு 2 GB டேட்டாவையும், ரூ.3,119 திட்டமானது ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவையும் 365 நாட்களுக்கு வழங்குகிறது.

PF பயனர்கள் கவனத்திற்கு – 8.50 சதவீத வட்டித்தொகை! கணக்கு சரிபார்ப்பு விவரங்கள் இதோ!

போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ ஐந்து திட்டங்களை வழங்குகிறது. இதில் 75 GB வழங்கும் ரூ.399 திட்டமும், 100 GB வழங்கும் ரூ.599 திட்டமும், 150 GB வழங்கும் ரூ.799 திட்டமும், 200 GB வழங்கும் ரூ.999 திட்டமும், 300 GB டேட்டாவை வழங்கும் ரூ.1,499 திட்டமும் அடங்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மாதந்தோறும் செலுத்தப்படும் Netflix, Amazon Prime Video மற்றும் Disney+ Hotstar ஆகியவற்றின் ஒரு வருட சந்தாவை உள்ளடக்கியது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!