IPPB வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்!

0
IPPB வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு - ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்!
IPPB வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு - ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்!
IPPB வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு – ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம்!

தற்போது வங்கி கணக்கில் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறி பணம் செலுத்தினாலும் எடுத்தாலும் சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவித்துள்ளது. இதனை கூடிய விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிக்கையாளர் கவனத்திற்கு:

தற்போது இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அடிப்படை சேமிப்பு கணக்கில் இருந்து முதல் நான்கு முறை பணம் எடுப்பதற்கு சேவை கட்டணங்கள் ஏதும் இல்லை. அதற்கு அடுத்த ஒவ்வொரு வித்ட்ராவலுக்கும் ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும். அத்துடன் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறி பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ சேவை கட்டணங்கள் கட்டாயமாக வசூலிக்கப்படும் என்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவித்துள்ளது

PF பயனர்கள் கவனத்திற்கு – 8.50 சதவீத வட்டித்தொகை! கணக்கு சரிபார்ப்பு விவரங்கள் இதோ!

இதர சேமிப்பு கணக்கு மற்றும் கரண்ட் வங்கி கணக்கில் இருந்து ரூ. 25000 வரை வித்ட்ரா செய்யலாம். இதற்காக கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. ஆனால் ரூ. 25 ஆயிரத்தை தாண்டும் போது ரூ. 25 வரை கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் ரூ.10 ஆயிரம் வரை வரவு வைப்பதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்த வரம்பை மீறும் போது கட்டணமாக ரூ. 25 வரை வசூலிக்கப்படும். இதனை வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் அறிவித்துள்ளது.

டிசம்பர் 31 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இவ்வங்கியானது கடந்த ஜூலை 1ம் தேதி முதல் சேமிப்பு தொகைக்கான வட்டி விகிதத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி ரூ.1 லட்சம் வரை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு வட்டியில் 2.5% ஆக மாற்றி அறிவித்தது. மேலும் 1 முதல் 2 லட்சம் வரை சேமிப்பு கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு வட்டியானது மாற்றமின்றி 2.75% ஆக தொடரும் என தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்த வங்கி ஒவ்வொரு வங்கி சேவைக்கும் ரூ.20 கட்டணமாக வசூலித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!