PF பயனர்கள் கவனத்திற்கு – 8.50 சதவீத வட்டித்தொகை! கணக்கு சரிபார்ப்பு விவரங்கள் இதோ!

0
PF பயனர்கள் கவனத்திற்கு - 8.50 சதவீத வட்டித்தொகை! கணக்கு சரிபார்ப்பு விவரங்கள் இதோ!
PF பயனர்கள் கவனத்திற்கு - 8.50 சதவீத வட்டித்தொகை! கணக்கு சரிபார்ப்பு விவரங்கள் இதோ!
PF பயனர்கள் கவனத்திற்கு – 8.50 சதவீத வட்டித்தொகை! கணக்கு சரிபார்ப்பு விவரங்கள் இதோ!

EPF பயனாளர்களது கணக்கில் தற்போது 8.50 சதவீத வட்டி தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகையை அறிந்து கொள்ள உமாங் செயலி, SMS மற்றும் மிஸ்டு கால்கள் மற்றும் இணையதள சேவைகள் நடைமுறையில் இருந்து வருகிறது.

கணக்கு சரிபார்ப்பு

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2020-21 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.50 சதவீதம், அவர்களின் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 23.34 கோடி EPF கணக்குதாரர்கள் தங்களது வட்டி தொகை குறித்த விவரங்களை சரிபார்க்கும்படி சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகளை PF பயனாளர்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே மேற்கொள்ள முடியும்.

TNPSC குரூப் 2 தேர்வெழுத திட்டமிடுவோர் கவனத்திற்கு – பதவிகள், கல்வித்தகுதி, வயது வரம்பு!

இதற்கிடையில் சமீபத்தில் சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020ன் பிரிவு 142ஐத் திருத்திய EPF அமைப்பு ஆதாருடன் இணைக்கப்பட்ட PF கணக்குகள் மட்டுமே பணம் செலுத்தத் தகுதி பெறும் என்று அறிவித்துள்ளது. அதனால் PF கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். ஆதார் இணைக்கப்படாத UAN கணக்குகளில் தொழிலாளி அல்லது முதலாளியின் EPF பங்கை இனி டெபாசிட் செய்ய முடியாது. இந்த மாற்றம், EPF இல் பங்கேற்பதை நீக்குவது மட்டுமின்றி, பல சேவைகளையும் கிடைக்காமல் செய்கிறது.

இதுமட்டும் இல்லாமல் EPF ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதும் இதனால் தடைபடும். இப்போது கணக்கு இருப்பு சேவைகளை வழகுவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உமாங் செயலி பயன்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இது போக, SMS, மிஸ்டு கால் மற்றும் இணையதளங்கள் மூலமும் PF கணக்கின் இருப்புத் தொகையை ஊழியர்கள் கண்டறியலாம். இதில் முதலாவதாக,

SMS மூலம் EPF இருப்புத் தொகையை அறிய:
  • பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO
  • UAN LAN வரிசையில் செய்தி அனுப்ப வேண்டும்.
  • UAN எண்ணை பயன்படுத்த உங்கள் ஆதார் எண் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • இப்போது உங்கள் UAN எண் மற்றும் LAN ஆகியவை மூலம் எந்த மொழியில் செய்தி தேவை என்பதைக் குறிக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தில் செய்தியைப் பெற ENG ஐ உள்ளிடவும்.

மிஸ்டு கால் மூலம் இருப்புத் தொகையை அறிய,

  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 01122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
  • பிறகு UAN எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPF பாஸ்புக் போர்ட்டலில் PF இருப்பைக் காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!