Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?

0
Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?
Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?
Vijay TV Bigg Boss 5 Promo | கடுமையாகும் டாஸ்குகள்! நாமினேஷனில் இருந்து தப்பிக்க போவது யார்?

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இறுதி சுற்றிற்காக கடுமையான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 11 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. பத்து வாரங்கள் முடிவடைந்த நிலையில் இனிமேல் இறுதி சுற்றிற்கு செல்லும் போட்டியாளர்களை தேர்வு செய்ய போட்டிக்களம் சூடுபிடித்துள்ளது. போட்டியாளர்களுக்கு மன, உடல் வலிமையை காட்டவும் டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த சீசன்களில் 10வது வாரத்திற்கு மேல் குறைவான போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் இருப்பதால் அடுத்தடுத்த என்ன மாதிரி எலிமினேஷன் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகள் கடுமையாக வந்தாலும் டாஸ்க் என்று வந்தால் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். அதனால் இந்த சீசன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

கைக்குழந்தையுடன் ஷூட்டிற்கு தயாரான “பாரதி கண்ணம்மா” வெண்பா – வைரல் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இன்றைய எபிசோடில் நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கடுமையான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, போட்டியாளர்கள் ஐந்து தடைகளை தாண்டி வர வேண்டும். முதலில் முள்வேலி கீழே சென்றுவிட்டு, பின் பசில் கட்ட வேண்டும், பின் சாக்கு உள்ளே நின்று தாவி தாவி குதிக்க வேண்டும். பின் முட்டை வைத்திருக்கப்படும் அதை கீழே சிந்தாமல் குடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் விளையாடி இருப்பது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!