கைக்குழந்தையுடன் ஷூட்டிற்கு தயாரான “பாரதி கண்ணம்மா” வெண்பா – வைரல் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
கைக்குழந்தையுடன் ஷூட்டிற்கு தயாரான
கைக்குழந்தையுடன் ஷூட்டிற்கு தயாரான "பாரதி கண்ணம்மா" வெண்பா - வைரல் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
கைக்குழந்தையுடன் ஷூட்டிற்கு தயாரான “பாரதி கண்ணம்மா” வெண்பா – வைரல் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!

தமிழில் முன்னணி சீரியலான “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் கலக்கி வரும் பரீனாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே ஷூட்டிற்கு தயாராகும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நடிகை பரீனா:

சினிமாவில் திருமணம் முடிந்தாலே அவர்களுக்கு மவுசு குறைந்து விடும் என்ற நிலை அந்த காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது பல சீரியல் நடிகைகள் அதற்கு எல்லாம் முடிவு கட்டி இருக்கின்றனர். பலர் திருமணம் முடிந்து கர்ப்பமாக இருந்தும் கூட சீரியலில் தொடர்ந்து நடித்து பின் குழந்தை பிறப்பிற்கு பின் கூட நடித்து வருகின்றனர். விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு அதிலும் குழந்தை பிறந்தத் போல காட்டப்பட்டு மீண்டும் பழையபடி நடிக்க தொடங்கி இருக்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3 மணி நேர சிறப்பு ஒளிபரப்பு!

அந்த வரிசையில் முன்னணி சீரியலான பாரதி கண்ணம்மாவில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனாவும் சேர்ந்து இருக்கிறார். தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டா பக்கத்தில் அவர் தெரிவித்தது முதல் பல போட்டோஷூட்கள், யோகா, உடற்பயிற்சி என ரசிகர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாளராக பரீனா இருந்திருக்கிறார். எவ்வளவு தான் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை எல்லாம் ஓரம் தள்ளி அழகான ஆண் குழந்தையை கடந்த மாதம் சுக பிரசவம் மூலம் பெற்று எடுத்தார் பரீனா.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கஸ்தூரிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன கண்ணன்!

அதன் பின் ஓய்வில் இருந்த அவர் சீரியலில் ஜெயிலில் இருப்பது போல காட்டப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கிறார். தனது ஒரு மாத குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே ஷூட்டிற்கு தயாராகும் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலருக்கு மிகவும் ஊக்குவிப்பாக இருக்கிறார். பல வேலை செய்யும் பெண்களுக்கு முன் உதாரணமாக பரீனா இருக்கிறார் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here