ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பிக்பாஸ்’ வனிதா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் பலரும் தற்போது சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் கலந்து கொள்கின்றனர். இந்த வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை வனிதா தற்போது ஒரு சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகை வனிதா:
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற குடும்பத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியவர்களின் மகள் வனிதா தனது பதின் வயதுகளிலேயே சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். நடிகர் விஜய், ராஜ் கிரண் போன்ற பலருடனும் சேர்த்து சில வருடங்கள் நடித்து வந்தார். அதன் பிறகு, திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் திரைக்கு முன்னாள் வந்தார். இந்த நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பலவற்றையும் கூறி, போட்டியாளர்களிடம் அதிகம் சண்டையிட்டு வந்தார். அதில் இருந்து வனிதா என்றாலே சண்டை என்று தான் அனைவரின் நினைவிற்கு வரும்.
கைக்குழந்தையுடன் ஷூட்டிற்கு தயாரான “பாரதி கண்ணம்மா” வெண்பா – வைரல் வீடியோ! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
பிக்பாஸ் புகழின் மூலமாக அதன் பிறகு பல வாய்ப்புகள் வனிதாவுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் வந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வனிதா தனியாக ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அதில், அழகு குறிப்புகள், அன்றாட நிகழ்வுகள், சமையல் ரெசிபிகளென்று பலவற்றையும் வெளியிட்டார். இவரின் ரெசிபிகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் வனிதா தொடர்பான பல சர்ச்சைகள் அவரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் வனிதா எதையும் கண்டுகொள்ளாமல் தனது பாதையில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3 மணி நேர சிறப்பு ஒளிபரப்பு!
இறுதியாக விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணன் கூறிய கருத்துக்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். இப்படி பல நிகழ்ச்சிகளிலும் பிசியாக இருக்கும் வனிதா, தற்போது ஜீ தமிழில் பிரபலமாக உள்ள பிற்பகல் சீரியல் திருமதி ஹிட்லர் தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ டிவியில் வெளியாகியுள்ளது. அதில், ஒரு போட்டியில் வனிதா நடுவராக வருவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் வனிதாவின் என்று குறித்து மகிழ்ச்சியில் உள்ளனர்.