விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3 மணி நேர சிறப்பு ஒளிபரப்பு!
விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் பல திருப்பங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வருகிற சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 3 மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப இருப்பதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாக்கியலட்சுமி சிறப்பு ஒளிபரப்பு:
பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. எல்லார் வீட்டிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை மையமாக கொண்டு சீரியல் இருப்பதால் ஏகப்பட்ட பெண்கள் ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த சீரியல் பாக்கியலட்சுமி என்ற இல்லதரசி வாழ்வில் வெற்றி பயணத்தை எப்படி அடைகிறார். அதே நேரத்தில் குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்கிறார் என பல அதிரடி திருப்பங்களுடன் இருக்கிறது. மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவான பாக்கியா இத்தனை ஆண்டுகள் குடும்பத்தை மட்டுமே பார்த்திருக்கிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கஸ்தூரிக்கு இன்று பிறந்தநாள் – வாழ்த்து சொன்ன கண்ணன்!
அதனால் அவருக்கு ஒன்றும் தெரியாது என கணவருக்கு பிடிக்காமல் போகிறது. அதே நேரத்தில் அவருக்கு தெரிந்த சமையலை அடிப்படையாக கொண்டு சுயதொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்று சென்று கொண்டிருக்கிறார். இப்படி இருக்க மறுபக்கம் அவரது கணவர் கோபி தனது கல்லூரி காதலி ராதிகா உடன் நெருக்கமாக பழகுகிறார். அது எல்லாம் தெரிந்து கோபியின் தந்தை ராமமூர்த்தி கோபியை கண்டிக்க, இனிமேல் ராதிகாவை பார்த்தால் அனைவரிடமும் உண்மையை சொல்லி விடுவேன் என மிரட்டுகிறார்.
சன்யாசத்தை தேடி சென்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம் & விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!
கோபி அதை நினைத்து குழப்பத்தில் இருக்க, அவர் இரண்டாவது மகன் எழில் காதல் தோல்வியால் இருக்கிறார். இந்நிலையில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை பாக்கியலட்சுமி தொடர் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 3 மணி நேரம் சிறப்பு தொகுப்பாக ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் என்ன என்ன திருப்பங்கள் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.