தமிழகத்தில் பெண்களுக்கு Work From Home – அரசு ஆணையர் புதிய யோசனை!!
தமிழகத்தில் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேர ஷிப்ட் பணிகளில் கூட அதிக அளவு ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் நலனைக் காக்க தமிழக மாநில தொழிலாளர் நலத்துறை செயலர் ஒரு புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
UPSC சிவில் சேவை தேர்வுகள் 2024 – முக்கிய வினாக்கள் இதோ!
அதன்படி, குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் சூழலில் பெண்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிப்பது சிறப்பாக இருக்கும். இவ்வாறு அனுமதித்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அது உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது